கப்பலோடிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் : லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர் தியாகி வ.உ. சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு லட்சிய ஜனநாய கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். கண்ணன்,வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை தாங்கினர்.
மேலும், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.