தில்லைநகரில் பத்திர பதிவுத்துறை அலுவலகம் : அமைச்சர் ஆய்வு
திருச்சி, ஜுன் 24 திருச்சி மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தில்லைநகரில் கட்டடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அமையவுள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கான இடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.