விஜயகாந்த் நலம் பெறவேண்டி தேமுதிகவினர் பிராத்தனை…

0 194
Stalin trichy visit

மணப்பாறையில் விஜயகாந்த் நலம் பெறவேண்டி மனமுருக பிராத்தனையில் ஈடுபட்ட தேமுதிகவினர்.

 

திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த மணப்பாறை ஒன்றிய தேமுதிகவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் வழிகாட்டுதலின் படி மாவட்ட துணை செயலாளர் டி.ஆர். சரவணன் தலைமையில் மணப்பாறையில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பூரணமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் அபிஷேகமும் நடைபெற்றது.

மணப்பாறை ஒருங்கிணைந்த ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்தின் உடல் நலம் பெற இறைவனிடம் மனமுருக வேண்டி அர்ச்சனை செய்தனர்
இதில் மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம் , பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், துரைராஐ், மகளிரணி தமிழ்செல்வி, சின்னத்துரை ன, கலைவாணன் முன்னிலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் செல்வேந்திரன், கணேசன், வேலுச்சாமி, சிதம்பரம், அழகர், சிவக்குமார், ரமேஷ், மணிகண்டன், முருகேசன், ரெங்கசாமி, குணசேகரன், முருகேசன், பொன்னுச்சாமி, கோபால், கிருஷ்ணன், அண்ணாத்துரை, மதன்ராஜ், சிதம்பரம், பாலசுப்பிரமணி, ராமர், கணேசன், சக்திவேல், பழனி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.