முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கல்
திருச்சி, பிப். 27 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் ராஜாமணி துவக்கப்பள்ளி மற்றும் ராஜா உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கடந்த 24 ம் தேதி மறைந்த முன்னால் முதல்வர் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை அதிமுக நிர்வாகிகள் தமிழக முழுவதும் அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இன்று பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள ராஜாமணி துவக்கப்பள்ளி மற்றும் ராஜா உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சார்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கணேஷ் என்கின்ற விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.மேலும் நலிவுற்ற பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டனது.