தமிழக காவல் துறை நிர்வாக காரணங்களுக்காக திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாநகர் காவல் நிலையங்களை இரண்டாக பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாநகர் காவல் நிலையங்கள் இன்று முதல் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு பிரிவுக்கு திருச்சி காவல் அதிகாரியாக சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வடக்கு பிரிவில் தில்லை நகர், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று சரகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வடக்கு போக்குவரத்து குற்றம் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்களைத் தடுத்தல், குற்ற பிரிவு , மாநகர குற்றப்பதிவு காப்பகம் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது
இதேபோல தென் பிரிவு காவல் அதிகாரியாக குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசன் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு பிரிவில் கே.கே நகர், கன்டோன்மென்ட், பொன்மலை ஆகிய 3 சரகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் தெற்கு போக்குவரத்து மாநகர, ஆயுதப்படை, சமூக நீதி மற்றும் மனித உரிமை, மாநகர் நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு தடுப்பு பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் வடக்கு, தெற்கு பிரிவுகள்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தெற்கு, வடக்கு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.