தோல்வி பயத்தில் திமுக கூட்டணி : மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

0 149
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  – தோல்வி பயத்தில் திமுக கூட்டணி உள்ளது என்று  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சியில் பேட்டி அளித்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக வருகிற 11ஆம் தேதி திருச்சியில் பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

11ம் தேதி திருச்சியில் அரசு நல திட்ட விழாவும் அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் …

தமிழகத்தில் இந்த கூட்டம் அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அதிமுகவில் பொதுச் செயலாளர் மாற்றம் ஏற்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு. அவர் மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளார். எப்போது தேர்தல் வந்தாலும் அவர் தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவரை முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ வரவேற்கவில்லை திமுக, காங்கிரஸ் உள்ளடக்கிய இண்டி கூட்டணி கண்டனத்திற்குரியது. மேலும் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிக்கான எந்த ஏற்பாடுகளையும் காவல்துறையினரும் செய்யவில்லை.

விஜய் மகளிர் தின விழாவில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்ற கேள்விக்கு .

அவர் இலவசம் இல்லையென்றால் இப்பொழுது இலவசத்திற்கு வந்திருக்கிறார்.
இது அவருக்கு முதல் தேர்தல். இதுவரை எதையும் அவர் நிர்ணயம் செய்யவில்லை.
எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார், வாக்குகள் வாங்குவார் என்பது தெரியாது.

சிரஞ்சீவி, விஜயகாந்த் கூட்டங்கள் வந்தது. நடிகர்களை பார்க்க கூட்டங்கள் வரும்.
நடிகரை பார்க்க வருகின்ற கூட்டம் வேறு, அரசியல் நோக்கத்தோடு வருகின்ற கூட்டம் வேறு.

தமிழக ஆளுநர் மாற்றம் என்பது பொதுவான ஒன்று. மேற்கு வங்காளத்தில் எப்படி குடியரசுத் தலைவருக்கு களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்களோ
அதேபோல் தமிழகத்திலும் திமுக கவர்னனர அவமதிப்பு செய்துள்ளது.

விஜய் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு ..

அது எல்லாவற்றையும் தேசிய தலைமை அறிவிக்கும்.

எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக உள்ளது.
எங்களிடம் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளது.
எங்கள் கூட்டணி திமுகவை விட முன்னோக்கி செல்கிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.