2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினருமான  கே .என். சேகரன் மகனும்,  திமுக பகுதிச்செயலாளருமான  சிவகுமார்  – பவதாரணி திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசும் போது,

அரசியலில் தந்தை – மகன் உறவு மிகவும் முக்கியமானது. திராவிட மாடல் அரசு மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நிறை வேற்றி வருகிறது.  திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக, மகளிருக்கான அரசாக, மாணவர்களுக்கான அரசாக உள்ளது. விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அனைவரும் ஓரணியில் தமிழ்நாடாக திரண்டு அடுத்த 8 மாதங்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சி அமைச்சர்கள் கே.என்-.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில்மகேஸ், கோவி.செழியன், தி-.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.