திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

0 222
Stalin trichy visit

திருச்சி, பிப்.20 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பர சம்பேட்டை தலைமை நீர்ப் பணி நிலையத்தில் பராமரிப்பு பணி கள் நடைபெற இருப்பதால் மாநகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பர சம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று (பிப்.20) காலை 9.45 600 முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான மரக் கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (பிப்.21) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. வருகிற பிப்.22 முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.