முசிறியில்அரசு கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஆக.22 முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணிக்கு கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை ஏற்க்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கைகாட்டியில் தொடங்கிய பேரணி துறையூர் சாலை பைபாஸ் ரோடு வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள்கலந்துகொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி துண்டு பிரசுரங்கள் வழங்கி சென்றனர். கல்லூரி பேராசிரியர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.