குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு
திருச்சி மார்ச் 22 துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 ) கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பழனியாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி கமலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.