ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவரை மீட்க கோரி ஒன்றிய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

0 215
Stalin trichy visit

திருச்சி, ஆக. 8 திருச்சி நாடாளுமனற் உறுப்பினர் துரை வைகோ, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணனை மீட்பது குறித்து ரஷ்யநாட்டு உயர் அதிகாரிகளி டம் தொடர்பு கொண்டு ஒன்றிய அமைச்சர் பேசி உள்ளார். கிஷோர் சரவணன் தனது வழக்கில் தண்டனையை ரத்து செய்ய ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டு போருக்கு செல்ல சம்மதித்து அதன் ஆவணங்கள் அனைத்திலும் கையொப்பமிட்டுள்ளார். அதனால் அவர் இப்போது ரஷ்ய பிரஜை என்றும் அதுகுறித்து இந்தியா கேட்க வேண்டாம் என்றும் ரஷ்யா பதிலளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். இதில் அவர் வற்புறுத்தபட்டுள்ளார் என கூறினேன். இதற்கு அமைச்சர் ரஷ்ய பயணத்தின் போது அவரை மீட்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டியதாக கைது செய் துள்ளனர். அவர்களை மீட்கவும் இந்த தொடர் கதைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தேன். இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒன்றிய அரசு சார்பில் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க பேசியுள்ளார், இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கையில் கைது செய் யப்பட்ட தமிழ்நாட்டு மீன வர்களுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களுக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று கூறினார். 2024 ஆம் ஆண்டு முதல் 700 மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும், 12 படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறி னார்.
ஆயினும், கடந்த 5 ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர் கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுடன் இலங் கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித் தேன். அந்த மனுவில், இந்தக் கைது சம்பவம் சர்வதேச கடல் எல்லைக் கோட் டிற்கு அருகில் நடந்ததை யும், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதனால் பெரும் வாழ்வாதாரம் இழப்பை சந்தித்து வருவதையும் சுட்டிகாட்டினேன். கைதானவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது படகு அடையாளங் களை மனுவில் சுட்டி காட்டி அவர்களை மீட்க கோரிக்கை வைத்தேன். பதிலுக்கு அவர் கட்டாயமாக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மீட்கப்படும் என உறுதி அளித்தார். இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.