துறையூரில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, செப். 11 திருச்சி மாவட்டம் துறையூரில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 68வது குருபூஜை விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், சரவணன், ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், நகராட்சி சேர்மன் செல்வராணி மலர்மன்னன், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்