திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல்

0 322
Stalin trichy visit

திருச்சி மார்ச் 21 விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராடிய விவசாயிகளை பஞ்சாப் காவல்துறை துணை இராணுவப்படை உதவியோடு  விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட
அய்யாக்கண்ணு உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர்.
இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Leave A Reply

Your email address will not be published.