திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 304
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள்   குறைதீர்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக இதில் கலந்துகொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யா கண்ணு மற்றும் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை தடுத்து நிறுத்தி இதுவரை கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறக்காமல் உள்ளது. எனவே விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும் மலத்தைத் தான் திங்க முடியும் எனக் கூறி மலத்தை மாவட்ட ஆட்சியிடம் முன் திங்க முயற்சித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து கூட்டத்தில் வந்து பேசுமாறு கூறிவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான அயிலை.சிவசூரியன் மாவட்டத்தில் சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற காவிரியின் உபரி நீர் வரும் பட்சத்தில் தேக்கி வைக்க கதவணைகளை கட்ட வேண்டும், காவிரி கரையோரம் 25 கிலோ மீட்டருக்கு உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு ஆண்டிற்கு மேலாக சாகுபடி செய்யாமல் போனதால் புல் முளைத்து தரிசு நிலங்களை சீர் அமைத்திட தமிழ்நாடு அரசு அண்டை மாநிலமான கேரளா அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8000 கர்நாடகா அரசு ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரமும் ஆந்திரா அரசு ஒரு ஏக்கருக்கு ரூ. 12000 வழங்குவது போல தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதே போல் பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் வீரசேகரன் பாரத பிரதமர் கிசான் நிதி கிடைக்காத பட்டாதாரர்களுக்கு உடனடியாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்ட கலைத்துறை மூலம் காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

தொடர்ந்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு இந்த பட்ஜெட்டில் ரூ. 48 லட்சம் கோடியில் விவசாயிகளுக்கு வெறும் ஒரு லட்சத்து 52ஆயிரம் கோடிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளனர். ஒரு நாடு பலம் பொருந்திய நாடாக வேண்டுமென்றால் விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேலும் நதிகள் இணைக்க போதிய நிதி ஒதுக்காமல்
விவசாய பிரச்சனைக்காக போராடினால் காவல்துறையினர் கைது செய்வதும் வீட்டு காவிலில் வைப்பதும் ஜனநாயக நாடா? அல்லது சர்வாதிகார நாடா? விவசாயிகள் போராடக் கூடாதா எனவே, மாவட்ட ஆட்சி  நாளை டெல்லி செல்லும் எங்களை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.