வைக்கோல் கட்டு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து : போராடி தீயை அணைத்த இளைஞர்கள்
திருச்சி, மார்ச் 26 வைக்கோல் கட்டு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து.போராடி தீயை அணைத்த இளைஞர்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் ராமநாதபுரத்தில் அறுவடை செய்த வயலில் இருந்து வைக்கோல் கட்டு ஏற்றி வந்த ஈச்சர் லாரி மின்கம்பி மீது உரசிதால் தீப்பற்றி எரிந்தது.
லால்குடி அருகே காட்டூர் ராமநாதபுரத்தில் செம்பரையைச் சேர்ந்த விவசாயி மனோகர் அறுவடை செய்த வயிலிலிருந்து ஈச்சர் லாரியில் 120 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டுச் சென்றது. அப்போது காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள நத்தம் காத்த கருப்புசாமி கோயில் அருகில் வந்த போது மேலே சென்ற தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசியதில் வைக்கோல் கட்டு தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் வினோத் குமார் உள்ளிட்ட இளைஞர்கள் பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஈச்சர் லாரியை ஓட்டி அருகில் உள்ள குட்டையில் இறக்கி தீயைஅணைத்தனர்.
இதில் வைக்கோல் கட்டு முழுவதும் எரிந்து சேதமடைந்த்தது.தீயை அணைக்க துரிதமாக செயல்பட்டதால் அறுவடைக்கு தயாராக உள்ள 10 க்கும் மேற்பட்ட நெல் வயல்கள் தீ விபத்தில் தப்பியது.