ஏசி மிஷினிக்குள் புகுந்த சாரைப் பாம்பு: உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

0 207
Stalin trichy visit

திருச்சி, அக்.6  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் உள்ள பாபாசிட்டி தெருவில் ஜெகன் என்பவர் வீட்டு ஏசி மிஷினில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்து. இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் மற்றும் வீரர்கள் விஜய், அலோசியஸ், பிரபு, சரத்குமார், அஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.