வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஐந்து பேர் கைது

0 234
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மணப்பாறையிலிருந்து குளித்தலை செல்லும் சாலையில் போலீசாரின் ரோந்து பணியின் போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த கரூர் மாவட்டம், தேவர்மலை பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்த சந்துரு, தினேஷ், ஸ்டாலின் மற்றும் மணப்பாறை மோர்குளத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர். மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.