தா.பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலிலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்கூடைகள் ஊர்வலம்

0 111
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 23  தா.பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலிலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்கூடைகள் ஊர்வலம்

திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை அருகே பிள்ளாதுறையில் அமைந்துள்ள செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் இருந்து, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பூக்கூடைகள் அனுப்பி வைக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, செங்குந்தர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மற்றும் பூக்கூடைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் நிறைவாக, பக்தர்கள் பூக்கூடைகளுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.