தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி நிவாரண உதவி
திருச்சி, ஆக.27 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி, நரியன் தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்வில் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், வட்ட கழக செயலாளர்கள் பிரகாஷ், மனோகர், சுப்பிரமணி, விஎன்ஆர் செல்வம், ஜெயந்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.