தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம்

0 279
Stalin trichy visit

திருச்சி, செப். 26  திருச்சி வயலூர் ரோடு, சீனிவாச நகர், 3வது மெயின்ரோட்டில் அமைந்துள்ள தில்லை மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம் 23ம் தேதி முதல் வருகின்ற 28ம் தேதி வரை தொடந்து 6 நாட்களுக்கு தினம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விக்னேஷ்குமார் கலந்து கொண்டு முடி உதிர்தல் பிரச்சனை, சொரியாசிஸ், மரு, மச்சம் நீக்குதல், தேமல், படர்தாமரை, சிரங்கு, முகப்பரு வடு சிகிச்சை, வெண்புள்ளி, பித்தவெடிப்பு, ஆணிக்கால், பொடுகு பேன் ஈறு பிரச்சனைகள் மற்றும் முக பொலிவு சிகிச்சைகளுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும் இந்த இலவச மருத்துவ முகாமில் நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் அனுசுயா நுரையீரல் பரிசோதனையில் இருமல், சளி அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், அடுக்கு தும்மல், மூச்சுத்தினறல், குறட்டை, காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு சிறப்பனா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

முதல் நாள் முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.