கஞ்சா விற்பனை செய்தவர் கைது
திருச்சி, நவ. 16 திருச்சி மாநகரில் ராம்ஜி நகர் எடமலைப்பட்டி புதூர் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கும் பகுதி கருப்பு பகுதியாக (பிளாக்ஸ்பாட்) எனக் கண்டறியப்பட்டு தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனையை தடை செய்யும் வகையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மொத்த விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரி மதன் என்கிற மதுபாலனை நேற்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியை சுரேஷ் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் -அவரிடமிருந்து 1.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.