தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 505 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 126 முகாம்களும் என மொத்தம் 631 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 75,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் நடந்த மாபெரும் தடுப்பு முகாமில் முதல் தவணையாக 78 ஆயிரத்து 399 நபர்களும் , இரண்டாவது தவணையை 27,751 நபர்களும் என மொத்தமாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 150 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மேலும் இன்று நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை அமைச்சர் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.