வெங்கடாசலபுரத்தில் பெண் மாயம்!

0 380
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் மாயமானார். கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார். தேடும் படலம் தீவிரம்.

புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி 52 வயதான தங்கம்மாள். இவர் சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இவரது கணவர் மற்றும் மகன்கள் உறவினர்கள் என அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என அவரது உறவினர்கள்
தெரிவித்துள்ளனர் தொலைபேசி எண்கள் 88076 24349, 74490 11204 9786408446 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.