பராமரிப்பு இல்லாத அரசு பள்ளி மைதானம்
திருச்சி, பிப்.1 திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்புமிக்க பள்ளியாக திகழ்கிறது. இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் அதிக பரப்பளவில் உள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் உருவாக உறுதுணையாக இருந்தது. தற்போது இந்த மைதானம் பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் தேங்கியும் சமமாக இல்லாமலும் உள்ளதால் பள்ளி மாணவர்களும் சுற்று வட்டாரத்தை சார்ந்த விளையாட்டு வீரர்களும் இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை எடுத்து சென்று மைதானத்தை சீரமைத்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.