இந்து முன்னணி திருச்சி கோட்ட ஆலோசனை கூட்டம்
திருச்சி நவ 19 அகிலபாரத இந்துமுன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் கமலேஷ் சிங் வழிகாட்டுதலின்படி இந்து முன்னணிதிருச்சி கோட்டை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில துணை தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் கோட்ட தலைவர் கனகராஜ்,கோட்ட பொதுச்செயலாளர் குணசேகர் கோட்ட செயலாளர் போஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த நாட்டில் இருந்து கொண்டு இந்த நாட்டிற்கு எதிராகவும் இறையாண்மைக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை தூண்டி மக்களிடையே பிளவு ஏற்படுத்த வேண்டும் அப்பாவி மக்களின் உயிரை பறிக்க வேண்டும் என்று நினைக்கும் பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணும் இல்லாமல் அகற்ற வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இந்து முன்னணி இரங்கலை தெரிவித்துக் கொள்வது.
தேர்தல் ஆணயத்தின் எஸ்.ஐ.ஆர். பணிகளை வரவேற்கிறோம். உள்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சுதேசி பொருளை மட்டுமே வாங்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.