திருச்சியில் CEDOI அமைப்பின் புதிய கிளை தொடக்க விழா

0 619
Stalin trichy visit

அனைத்து தொழிலதிபர்களின் தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உயரிய எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட CEDOI அமைப்பு இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி கோர்ட்டையர்டு மேரியாட் ஹோட்டலில் CEDOI திருச்சி கிளை அமைப்பானது நிறுவப்பெற்றது. இந்நிகழ்வில் திருச்சியிலுள்ள தொழில்முனைவோர்கள் பலர் உருப்பினர்களாகச் சேர்ந்து பதவியேற்றுக் கொண்டனர். உறுப்பினர்களைச்சேர்ந்த அனைத்து தொழிலதிபர்களும் தங்களது உழைப்பினை நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அர்பணிப்போமென்ற நலனுக்காகவும் தொழில்துறையின் கூட்டாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்விழாவில் கல்வியாளர் மற்றும் பேச்சாளர் ஈரோடு மகேஷ், டெர்பி ஜீன்ஸ் கம்யூனிட்டியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் கபூர், NR IAS அகாடெமியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜயாலயன் மற்றும் RBS குழுமத்தின் நிர்வாக இயக்குனர் RBS மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் CEDOI இன் நிறுவனர் Dr.ரியாஸ் விருந்தினர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் வரவேற்று நிகழ்ச்சியுரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டலா இயக்குனர் அஹமது கமில் முஸ்தபா அவர்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லிருந்து CEDOI உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.