ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

0 298
Stalin trichy visit

திருச்சி, செப்.10 திருச்சி மாவட்டம்,  பூவாளூர் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர்  அ.சௌந்தரபாண்டியன்  தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் ₹28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை பள்ளியின் மாணவன் நிகில் மேத்யூ வை வைத்து சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ், பேரூராட்சி செயலாளர் பன்னீர், பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்தி ரோஸ் வள்ளி தலைமை ஆசிரியர் வார்டு உறுப்பினர்கள் வாஷிங்டன் இளவரசி தேவிகா ஹேமலதா மஞ்சுளா ராஜா மேகலா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.