காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
திருச்சி, மே 6 திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் சார்பில் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் ஏற்பாட்டில் வழி விடு முருகன் கோவில் ராஜீவ் காந்தி சிலை முன்பு அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை திருநாவுக்கரசர் எம். பி. நேற்று திறந்து வைத்து மக்களுக்கு நீர்மோர் தர்பூசணி வழங்கினார்.
அருகில் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் முரளி, அபுதாஹீர், கோட்டத் தலைவர் மணிவேல்,
மாவட்ட துணைத் தலைவர் பட்டேல், ஐடி பிரிவு விஜய் பட்டேல், ஊடகப்பிரிவு செந்தில்,வார்டு தலைவர் விமல் ராஜ், கண்ணன், அனந்த பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.