திருச்சியில் நிப்பான் பெயின்ட்டின் ‘நியோ ஹோம்ஸ்’ புதிய விற்பனை நிலையத்தில் திறப்பு விழா
திருச்சி, ஆக.28 திருச்சியில் நிப்பான் பெயின்ட்டின் ‘நியோ ஹோம்ஸ்’ புதிய விற்பனை நிலையத்தில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது
பிரபல பெயிண்ட் மற்றும் வண்ணத் தயாரிப்பு நிறுவனமான நிப்பான் பெயின்ட் (Nippon Paint), திருச்சி மக்களுக்காக தனது புதிய விற்பனை நிலையமான ‘நியோ ஹோம்ஸ்’ (Neo Homes) கிளையை இன்று கோலாகலமாகத் தொடங்கியது
திருச்சி புத்தூர், ஜி.எச் (GH) அருகில் உள்ள ஈ.வி.ஆர் சாலை, ராஜ் காம்ப்ளக்ஸ் எண் 9-ல் அமைந்துள்ள ‘சுப்ரீம் பெயின்ட்ஸ் & ஹார்டுவேர்’ வளாகத்தில் இப்புதிய விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டல மேலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நிப்பான் பெயின்ட் இந்தியாவின் அலங்கார வணிகப் பிரிவுத் தலைவர் (President – Decorative Business) மார்க் டைட்டஸ் ( Mark Titus) அவர்கள் கலந்துகொண்டு இப்புதிய கடையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
வாடிக்கையாளர்களின் வீடுகளை அழகாகவும், நவீனமாகவும் மாற்றிமைக்கும் (Home Transformation) பல்வேறு வகையான மேம்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதிய அனுபவங்களை வழங்குவதற்காக இந்த ‘நியோ ஹோம்ஸ்’ கிளை உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி செயலாளரும், தாளாளருமான நிஜாமுதீன் மற்றும் மண்டல விற்பனை இயக்குநர்கள் கிருஷ்ணன், வெள்ளைதுரை மற்றும் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உள்ளூர் வர்த்தகப் பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.