மணப்பாறையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

0 249
Stalin trichy visit

திருச்சி, ஏப். 25 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரிப்பதால் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்டக் கழக செயலாளர் பா. குமார் தலைமையில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் தர்பூசணி பழம், நீர்மோர், பாணக்கா, தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னசாமி, நகர செயலாளர் பவுன் மூர்த்தி, ஒன்றிய செயலாளர், அன்பரசன், சேது பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், கவுன்சிலர்கள் பத்தி பாஸ்கர், எத்திராஜ், ராமன், அபி(எ) அபினேஷ் ராஜா, சாய் சுரேஷ், வழக்கறிஞர் துளசி, ஏ டி எஸ் ராமச்சந்திரன், நெக்ஸ் இளங்கோ, வழக்கறிஞர் சரவணகுமார், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.