சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை: கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், ஆவணங்கள் பறிமுதல்

0 24
Stalin trichy visit

திருச்சி, டிச.11  சமயபுரம் சிமெண்ட் ஆலையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் ஆவணங்கள் கைப்பற்றிய அதிகாரிகள்.

தொடர்ந்து ஆலையில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள்.

சமயபுரம் பகுதியில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் தண்டபாணி சிமெண்ட் மற்றும் மாருதி சிமெண்ட் ஆலையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி பில்கள் கொண்டு சிமெண்ட்க்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்கியதாகும், மேலும் போலி பில்கள் மூலம் சிமெண்ட் விற்பனை செய்ததாகும் எழுந்த புகாரின் பேரில் நேற்று காலை 10 அளவில் வருமானவரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் (ஜிஎஸ்டி) திடீரென சிமென்ட் ஆலையில்,உரிமையாளர் வீட்டில் மற்றும் ஆலையின் துணை தலைவர், பினான்ஸ் மேனேஜர் வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை இரவு 3 மணி வரை சோதனை நடத்தினர்.

தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று 40 திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மற்றும் டேட்டாக்களை சோதனையில் செய்ததில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றதாகும் பல ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

இதில் பல வருடங்களாக ஆண்டிற்கு பல டன் கணக்கில் விற்பனை காட்டிய இந்த சிமெண்ட் ஆலை நிறுவனர் கடந்த சில வருடங்களாக சிமென்ட் விற்பனை கணக்கையும், சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களையும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரி பில்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.