லால்குடி அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

0 151
Stalin trichy visit

திருச்சி, ஜன.21  திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பன்னாட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேரா. த. ஜெயக்குமார் தலைமை வகித்தார். இலங்கை, ஈஸ்டன் பல்கலைக் கழகத்தின் டீன் மற்றும் பேரா. ஜீவரத்தினம் கென்னடி (இணையவழியில்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தின் முன்னாள் டீன் பேரா. ர. செல்வம் “இலக்கியமும் மனிதநேயமும்” என்ற தலைப்பிலும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப்பேராசிரியர் – ஏ. அஜ்மல்கான் “இலக்கியமும் அன்பும்” என்ற தலைப்பிலும், கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை இணைப்பேராசிரியர் எஸ். தென்னரசு “மொழியியல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது” என்ற தலைப்பிலும், திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேரா. செ. மஹா” மின்னனு ஊடகத்தில் மக்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறார்கள்? எவ்வாறு அதில் சிக்குகிறார்கள்? என்ற தலைப்பிலும், திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஜெ. சுபஸ்ரீ “உளவியலும், இலக்கியமும்” என்ற தலைப்பிலும், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேரா. அகஸ்டின் கிறிஸ்டோபர் “டிஜிட்டல் உளவியல் இலக்கியத்தில்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

ஆங்கிலத்துறை தலைவர் பேரா. வீரமணி வரவேற்றார். பேரா. காஞ்சனா தேவி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.