திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

0 301
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 24 ஆம் தேதி, திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில், நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தற்போது சுத்தம் செய்யும் பணி, மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் பா.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், It wing மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், கோப்பு நடராஜ், கடிகை மா. ராஜகோபால், எஸ்.பி முத்து கருப்பன், எல்.ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பகுதி கழக செயலாளர்கள் முஸ்தபா, ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரசன்ன குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாத்தனூர் வாசு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் நவநீதகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கார்த்தி, புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் எட்டரை அன்பரசு, விவசாய அணி மாவட்ட தலைவர் ரங்கராஜ், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய கழக பொருளாளர் வீரமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் வெங்கட்பிரபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் எம் கே கதிரவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.