திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறைக்காவலர் சந்துரு பணியில் இருந்தபோது விசாரணை கைதியான அழகுராஜா என்பவர் காவலரின் அனுமதியின்றி சென்றுள்ளார். இதுபற்றி காவலர் கேள்வி கேட்கவே, அவரை
அழகுராஜா கீழே தள்ளிவிட்டுள்ளார். உடனே அவரை சிறை அலுவலகத்துக்கு அழைத்த போது, மேலும் 3 கைதிகளை அழைத்துக்கொண்டு, மரத்தில் ஏறி கூச்சல் போட்டு கலாட்டா செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயிலர் சண்முகம் கே.கே.நகர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.