காங்கிரஸ் கட்சி வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன கடிதம் வழங்கல்

0 354
Stalin trichy visit

திருச்சி மார்ச் 8- திருச்சி மாநகர் மாவட்ட மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கும் பதவி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது. திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெனன்ட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி கலந்து கொண்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொருளாளர் முரளி, கலைப் பிரிவு பெஞ்சமின் இளங்கோ மகளிர் அணி சீலா ஷெலஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல், பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, மார்க்கெட் சம்சுதீன், அழகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.