ஜெ,ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை…
முன்னாள் முதல்வர் ஜெ,ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை
அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –
கழகப் பொதுச் செயலாளர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மக்களுக்காக நான் மக்களுக்காகவே நான் என்கிற உயர்ந்த சிந்தனையோடு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து…. மறைந்து மறையாமலும் நம்மளை எல்லாம் வழி நடத்தும் கழகத்தின் காவல் தெய்வம், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 5.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் நமது திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறும், திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலை அம்மா அவர்களின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.