ஜெயலலிதா பிறந்த நாள்விழா கோலப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

0 228
Stalin trichy visit

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

திருச்சி, பிப். 23  திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய சார்பில் சொரத்தூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  76 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பெண்களுக்கான மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது. சொரத்தூர் பகுதியில் நடைபெற்ற கோல போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள்  திறமையை காட்டினார். துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ரமேஷ் சொரத்தூர் சிவசான் மனோகரன் ஆதனூர் செல்வராஜ் நாகராஜ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.