திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்வு

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 11 திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கான ‘காப்புக்கட்டு நிகழ்வு நேற்று  மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராஜேஷ்  தலைமை தாங்கினார்கள்.

“தமிழர் பண்பாடும் சனாதன இந்து மதம் ஒன்று” என்ற தலைப்பை முன்வைத்தும், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை இந்து எழுச்சித் திருவிழாவாக சீரும் சிறப்புமாக கொண்டாடும் நோக்கிலும் இந்த காப்புக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைத்து விநாயகர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியின் திருச்சி மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.