மரக்கடை பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, மார்ச் 9 திருச்சியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழக செயலாளர் பாபு வரவேற்புரை ஆற்றினார். 20வது வட்ட செயலாளர் சுருளி ராஜன் மற்றும் 20வது ஏ வட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகரக் கழக செயலாளர் மண்டல தலைவருமான மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.