மாநகராட்சி பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா
திருச்சி, ஜூலை 16 காமராசர் 123வது பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி ஜூலை 16ல் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது.
கல்விக்கண் திறந்த காமராசரின் 123வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி வார்டுஎண் 23ல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் கிழக்கில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு புத்தகப் பைகளை மாமன்றஉறுப்பினர் க.சுரேஷ்குமார் வழங்கி உரையாற்றினார்.பள்ளியின் தலைமை ஆசிரியை பொறுப்பு ம.செசிலி வரவேற்புரையாற்றினார். மழலையர் வகுப்பு ஆசிரியை R.தாரணி நன்றி கூறினார். ஆசிரியர்கள் லதா, சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.