சிறுநீரகமும் செயல் இழந்த தன் மகனுக்கு எவ்வித தயக்கும் இன்றி தனது சிறுநீரகத்தை வழங்கி உயிரை காப்பாற்றிய தாய் – திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

0 416
Stalin trichy visit

அ – உயிரெழுத்து … ம் – மெய் எழுத்து … மா – உயிர் மெய் எழுத்து … ஆம் தன் உயிரிலும் உடலிலும் இருந்து மற்றொரு உயிரையும் உடலையும் தருவதால் அவரை அம்மா என்கிறோம் …. எல்லோருக்கும் ஒரு முறை மட்டுமே அன்னை உயிர் கொடுப்பார் – ஆனால் திருச்சி லால்குடியை அடுத்த மாந்தரையை சேர்ந்த வைத்தீஸ்வரனுக்கு அவரது தாயார் பார்வதி இரண்டாவது முறையும் உயிர் கொடுத்துள்ளார் …அந்த சுவராசிய நிகழ்வை இப்போது பார்ப்போம் …

உப்பு சத்து அதிகரித்ததால் தனது 2 கிட்னியையும் இழந்த லால்குடி மாந்தரையை சேர்ந்த வைத்தீஸ்வரனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வைத்தீஸ்வரன் என் தாயார் பார்வதி மற்றும் தந்தை சிவானந்தம் அழைத்து வந்துள்ளனர்.

 

வைத்தீஸ்வரனுக்கு எல்லா வித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்ட திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரது இரண்டு கிட்னியும் செயல் இழந்ததை எடுத்து கூறினர் – அடுத்த நொடியே எனது ஒரு கிட்னியை எடுத்து மகனுக்கு செலுத்தி உயிர் கொடுங்கள் என்று கூறி உள்ளார் வைத்தீஸ்வரனின் தாயார் பார்வதி.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் பார்வதியின் கிட்னியை வைத்தீஸ்வரனுக்கு பொருத்த முடியும் என்பது மருத்துவ குழுவினருக்கு தெரியவந்தது – முறைப்படி ஒப்புதல் பெற்று பார்வதியின் ஒரு கிட்னி வைத்தீஸ்வரனுக்கு பொருத்தப்பட்டது.

 

 

 

தனது மகனுக்கு கிட்னியை வழங்க போகிறேன் என்பதை என்னிடம் கூட சொல்லவில்லை என கூறும் வைத்தீஸ்வரனின் தந்தை சிவானந்தம் … தனது மனைவியின் அசாத்தியமான முடிவை கண்டு தானே மெய் சிலிர்பதாக கூறுகிறார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருக்கும் ஒருவரின் கிட்னியை மற்றொருவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடனடியாக பொறுத்துவது இதுவே முதல் முறை என கூறும் மருத்துவமனை முதல்வர் வனிதா இதற்காக மருத்துவர்கள் குழு பல சவால்களை சந்தித்ததாக கூறுகிறார் …

தனக்கு தனது தாய் கிட்னியை வழங்கிய பின்னர் எழுந்து நின்ற வைத்தீஸ்வரன் நான் உடனடியாக அம்மாவை பார்க்க வேண்டும் என்று பரிதவித்த அந்த பாசப்போராட்டத்தை நான் மறக்கவே முடியாது என்கிறார் வைதீஸ்வரனின் சகோதரி வைஷ்ணவி ..

தனது குழந்தைகளுக்காக எத்தகைய தியாகத்தையும் … ஏன் தனது உயிரை கூட பெரிதுபடுத்தாமல் … தகுந்த நேரத்தில் உதவி அன்பு பாராட்டும் உள்ளம் பார்வதி போல் தாய்மார்களிடம் மட்டுமே பார்க்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Leave A Reply

Your email address will not be published.