விதையை செடியாக வளர்த்த மாணவர்களுக்கு பாராட்டு

0 427
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் 3தொடக்க பள்ளி

1. கோகுல விலாஸ் நிதிபெறும் தொடக்க பள்ளி, வராதராஜபுரம்.

2.ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தொட்டியம் தெற்கு.

3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொட்டியம் வடக்கு.

குழந்தைகளுக்கு (110), கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வன மர விதைகள் மற்றும் வளர்ப்பு பைகள் கொடுத்து நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கொடுக்கப்பட்ட விதையை செடியாக வளர்த்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இன்று நவம்பர் 14, குழந்தைகள் தினத்தத்தன்று கொடுக்கப்பட்ட விதையை செடியாக வளர்த்து வந்த 10 குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் மற்றும் கருப்பட்டி மிட்டாய் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அரசு பள்ளி நிர்வாகம் மற்றும் பசுமை மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.