“பிளாஸ்டிக் தவிப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு வரவேற்பு

0 181
Stalin trichy visit

திருச்சி, அக்.25  வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப்  பதவி உயர்வு பெற்ற திருச்சி வருகை புரிந்த மயில் வாகனனை தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்றனர்.

திருச்சி மாவட்ட தடகள சங்க தலைவரும், வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான மயில் வாகனனை  தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் “பிளாஸ்டிக் தவிர்ப்போம்,துணிப்பையை எடுப்போம்” என துணிப்பையும் மற்றும் புத்தகம் கொடுத்தும், திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் பயன்னாடை அணிவித்தார்கள்.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, நிர்வாகிகள் கனகராஜ், ரெங்கச்சாரி, இளங்கோ, லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.