புத்தகங்களை வாசிக்கும் பொழுது தான் வாழ்க்கை மாறும் : இயக்குனர் மாரி செல்வராஜ்

0 23
Stalin trichy visit

திருச்சி, டிச.12 அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளுக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நமக்கு யார் தேவை என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் – திருச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ்,

10 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்னை டிவியிலிருந்து பேட்டி எடுக்க வருவார்கள் என என் பெற்றோர்களிடம் கூறினேன் ஆனால் 10 ஆம் வகுப்பில் நான் தோல்வி அடைந்தேன். ஆனால் பரியேறும் பெருமாள் வெளியான பின் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தார்கள் நான் தனித்து நின்றாலும் கூட என்னுள் இருக்கும் கலை என்னையையே ரசிக்க கற்று கொடுத்தது.
ரஜினி, விஜய் சினிமாக்களை நான் பார்த்து ரசித்தேன். அதன் பின் நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன் அது பின் தான் வாழ்க்கை மாறியது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

கலை என்பது ஆடல், பாடல் என்பது மட்டுமல்ல தன்னிலை உணர்தலோடு செயல்பட வேண்டும் என்பது தான், அதற்கு வாசிப்பு தான் அடிப்படை. உங்களை ரசிக்கவும் கொண்டாடவும் உங்களை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமாக்கு செல்வது, விளையாட மைதானத்திற்கு செல்வது போன்று ஆர்வத்தோடு நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படிக்க வேண்டும்.
100 தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை தான் பரியேறும் பெருமாள் ரஞ்சித் இருந்ததால் தான் பரியேறும் பெருமாளை என்னால் எடுக்க முடிந்தது.
சமூக பொறுப்புள்ள இயக்குனராக என்னை மாற்றியது வாசிப்பால் தான்.
உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது. நாம் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடம் என அனைவரிடமும் மனம் திறந்து உரையாட வேண்டும். நம் உரையாடலுக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியம் அந்த வார்த்தைகளை புத்தக வாசிப்பின் மூலம் நாம் பெற முடியும்.
கிடைக்கும் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்களிடம் முரண்படும் நபர்களிடம் அன்பு செலுத்தி அவர்களிடம் பேசி அவர்களை வென்று எடுப்பது தான் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை. சமூகம் நன்மையான விஷயங்களை கொடுப்பது போல் மோசமான விஷயங்களையும் கொடுக்கும்
ஜாதி என்கிற வாழ்க்கை முறையை உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரையும் துன்புறத்தவில்லை என நினைக்கலாம் ஆனால் உங்களுக்கு தெரியாமலே அது நடக்கும் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
சக மனிதர்களை நேசித்து வாழ போது அவர்களிடம் அன்பு செலுத்தும் போது ஜாதி உள்ளிட்ட இவையெல்லாம் மறைந்து போகும். நம்பிக்கை என்பது வேறு வெறி என்பது வேறு
நாம் கலையை எதற்காக செய்கிறோம் என்கிற புரிதல் நமக்கு வேண்டும்.
உங்களை நீங்களே ரசித்து உங்களை கொண்டாடி கொண்டு, உங்களை கண்டு கொண்டு இருக்கும் போது தான் சாதிக்க முடியும். வாழ்க்கையை பிழைகளோடு தான் கற்று கொள்ள முடியும். நாம் செய்தவற்றில் எது தவறு, எது அவசியமற்றது என்பதை வாசிப்பு தான் கொடுக்கும்.
நான் எடுத்த படங்கள் அனைத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற நம்பிக்கையில் தான் எடுத்தேன் அது வெற்றி பெற்றது. புத்தக வாசிப்பின் போது உங்கள் முகம் பேச்சு என அனைத்தும் மாறும் எனவே கண்டிப்பாக புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாரிசெல்வராஜ்,  சினிமா, ஒ.டி.டியால் புத்தக வாசிப்பு குறைந்து விட்டது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் குழந்தைகளின் வாசிப்பை பெற்றோர்கள் தான் ஊக்கிவிக்க வேண்டும், பெற்றோர்கள் வாசிக்க தொடங்கினால் குழந்தைகளும் வாசிப்பார்கள்.

சினிமா, கோவில், பூங்கா உள்ளிட்டவற்றுக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்வது போல் நூலகங்களுக்கும் அழைத்து சென்றால் வாசிப்பு மேம்படும்.
மக்கள் எதை விரும்பி பார்க்கிறார்களோ அதை வைத்து தான் திரைப்படங்கள் வெளியாகிறது. மக்கள் மன நிலை மாறினால் சினிமாவும் மாறும். அவசியமற்றதை மக்கள் ஒதுக்க வேண்டும் அவசியமற்றது என தெரிந்தும் திரைப்படங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
போதை பொருள்கள் அவசியமற்றது என எல்லோருக்கும் தெரியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் அவர்களுடன் நண்பர்களாக வேண்டும். அப்போது இன்றைய இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எல்லா துறைகளுக்கும் எல்லும் வரலாம் ஆனால் நமக்கு யார் தேவை யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

எந்த துறையாக இருந்தாலும் கொள்கையை வெளிப்படையாக கூற வேண்டும்.
சினிமா துறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற அவசியமில்லை அனைத்து துறைகளும் முக்கியமானது. அதிக மக்களோடு தொடர்புடைய துறையான சினிமா துறையை நல்ல விதத்தில் கையாள வேண்டும். அதை நேர்மையாக கையாள வேண்டும்.
நான் சிறு வயதிலிருந்து அரசியலில் இருந்தேன் அந்த அரசியலிலிருந்து தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமா வழியாக அரசியல் பேசுகிறேன். என்னுடைய அரசியல் கலை பண்பாட்டோடு இணைந்தது. பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியானால் மக்கள் விருப்பபட்டால் பார்ப்பார்கள் அதுவும் ஒரு பொழுது போக்கு தான். படங்களை ரீ – ரிலிஸ் செய்ய கூடாது என்பதில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.