முசிறி உரிமையியல் நீதிமன்றத்தில் லோக் அதாலத்; 208 வழக்குகளுக்கு தீர்வு
முசிறி உரிமையியல் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் வேலுச்சாமி தலைமையில் சட்ட தன்னார்வலர்கள், அரசு வழக்கறிஞர் பாரதிராஜா, முசிறி பார்கவுன்சில் தலைவர் செந்தில்குமார், லோக் அதாலத் உறுப்பினர் வழக்கறிஞர் கணபதி ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
அப்போது குற்றவியல் நீதிமன்றத்தில்163 வழக்குகள், உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் 45 சேர்த்து 208 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் குற்றவியல் வழக்குகளில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.