சந்தைப்பேட்டையில் பைக் திருடிய நபர் கைது

0 391
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் நிறுத்தி இருந்த பைக்கை திருடிச சென்றவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
லால்குடி மும்முடி சோழ மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் 24 வயதான விஜய்.இவர் கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை லால்குடி சந்தைபேட்டையில் நடைபெறும் காய்கறி வாரச் சந்தைக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கி விட்டு பின்னர் திரும்பி வந்தபோது பைக் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் சாலையில் பைக்கை திருடிச்சென்ற லால்குடி அய்யன் வாய்க்கால் கரையைச் சேர்ந்த ஜெயபால் மகன் 27 வயதான ஸ்ரீராம் என தெரியவந்தது பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.