“மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம்” மஞ்சப்பை விழிப்புணர்வை கையிலெடுத்த திருச்சி எம்.எல்.ஏ!

0 425
Stalin trichy visit

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் ஆபத்துகளை உலகமே பேசத் தொடங்கியிருக்கிறது. இவையனைத்தும் சுற்றுச்சூழலை மனிதர்கள் பாழ்படுத்தியதன் விளைவு தான். இனியும் சுற்றுச்சூழலை கவனிக்காமல் விட்டால் பேரழிவுகள் என்பது தடுக்க முடியாததாகிவிடும் என்கிற நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்க தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், தமிழகமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளது. தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் விதமாக பிளாஸ்டிக்குக்கு `குட்பை’ சொல்லும் `மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்தார். மஞ்சப்பையை கிராமத்தானின் அடையாளமாகவும், நாகரிமற்றதாகவும் மாற்றி வைத்திருக்கும் சூழலில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை உபயோகம் தொடங்கியுள்ளது

 

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து பேசிய முதல்வர், “உலகமயமாக்கலுக்கு முன்பு இன்று நாம் நாகரிகம் என்று சொல்கிற வாழ்க்கை முறைகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் நாம் பயன்படுத்தியது `மஞ்சப்பை’ தான் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் “தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி தான்” என்பதற்கு உதாரணமாக திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ வும் மஞ்சப்பை விழிப்புணர்வை கையில் எடுத்துள்ளார்.

 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் இனிகோ இருதயராஜ். தொகுதி மக்கள், தொகுதி பிரச்சனை தொகுதி தொண்டர்கள் என எப்போதும் கிழக்கு தொகுதி மக்களின் உள்ளம் கவர்ந்தவர் ஆக வலம் வருபவர். கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காந்தி மார்கெட், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி உதவும் மக்களில் ஒருவர். ஆம், அடிமட்ட தொண்டனின் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் கிடந்தபோது ஓடோடி போய் நலம் விசாரித்து வருபவர்.

 

இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மஞ்சப்பை விழிப்புணர்வு திட்டத்திற்கு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு மஞ்சப்பை உபயோகம் குறித்த விழிப்புணர்வை இனிகோ இருதயராஜ் தினந்தோறும் ஆற்றி வருகிறார். மஞ்சப்பை உபயோகிப்பது நன்மைகள் குறித்தும் மஞ்சப்பை உபயோகிக்க வேண்டும் என செல்லும் இடங்களில் எல்லாம் தற்போது கூடுதலாக அறிவுரை சொல்லி வருகிறார்.

பூமிப்பந்தின் பசுமையை நாம் மட்டும் அனுபவித்து அழித்து விடாமல் அடுத்த தலைமுறைக்கும் விட்டு வைப்போம்! நெகிழிப் பைகளை தவிர்ப்போம்! தமிழக முதல்வர் தளபதி அவர்களின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்போம்!

 

கரம் கோர்ப்போம்! மஞ்சப்பையை கையில் எடுப்போம்! அரசின் முடிவிற்கு வாரீர் கைகொடுப்போம்!

 

என்ற பதிவோடு மஞ்சப்பைக்கு முதற்கட்ட விழிப்புணர்வை கையிலெடுத்து களம் காண உள்ளார்

Leave A Reply

Your email address will not be published.