லால்குடி அரசு மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 348
Stalin trichy visit

லால்குடி அருகே பெரிய குறுக்கை கிராமத்தில் பண்ணைத் தோட்டத்தில், தொழிலாளியாக வேலை செய்த விடுதலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் வயது 40 என்பவர் தலை கால் முகம் ஆகிய பகுதிகளில் ரத்த காயங்களுடன் மர்ம மான முறையில் உயிரிழப்பு.

கல்லக்குடி போலீசாரின் நடவடிக்கை சரியில்லை என கூறி கடந்த 3 நாட்களாக உயிரிழந்த முருகேசனின் சடலத்தை வாங்க மறுத்து வந்த நிலையில், இன்று லால்குடி அரசு மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில், உயிரிழந்த முருகேசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் லால்குடி அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பண்ணை தோட்ட உரிமையாளர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை கல்லக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.