மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எல்.ரெக்ஸ் மூத்த சகோதாரர் எல்.வி.யூஜின் குருத்துவ வெள்ளிவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு

0 110
Stalin trichy visit

திருச்சி பிப்.14 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ்-யின்  மூத்த சகோதரர் அருட்திரு. எல்.வி. யூஜின்  குருத்துவ வெள்ளி விழா, புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

விழாவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், நெடுஞ்செழியன், மேயர் அன்பழகன், மாநகராட்சி கோட்ட தலைவர் மதிவாணன், மாநகர செயலாளர் வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே ஆர் ஆர் ராஜலிங்கம், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ எம். சரவணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெனட் அந்தோணிராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே என் சேகரன், அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணா, ஆனந்தமாணிக்கம், அனைத்து மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரர், அருட்சகோதிரிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.