மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி, பிப். 28 அரசு தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், அடங்கிய தொகுப்பினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட 10, 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடங்கிய தொகுப்பினை தனது அலுவலகத்தில் வழங்கினார். இதனை பள்ளி மாணவ மாணவ மாணவிகள் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்